காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவிற்கான சுவரொட்டி வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2023 03:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மிக வைபவமாக நடக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கான சுவரொட்டிகளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசலு மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி கேவி சாகர் பாபு தலைமையில் வெளியிட்டனர் .இந்நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி வருகை தந்து சுவரொட்டிகளை (மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான) சுவரொட்டிகளை வெளியிட்டு பேசுகையில் இவ்வாண்டு நடக்கவிருக்கும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தை கோயில் அறங்காவலர் குழுவும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சாகர் பாபு தலைமையில் கோயில் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பிரம்மோற்சவ விழாவை வெற்றி அடைய செய்ய உள்ளதாகவும் இதற்கான( விழாவிற்கான) சுவரொட்டிகளை ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி சுவரொட்டிகளை வெளியிட்டு விழாவிற்கான விரிவான பிரச்சாரத்தை செய்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய வழி வகைக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் திருப்பதி மாவட்ட ஆர்டிஓ ராமராவ் மற்றும் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிவன் கோயில் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.