Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடும்பு கோவில் திருத்தேர் உற்சவம் ... வைத்தீஸ்வரன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம் வைத்தீஸ்வரன் கோவிலில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த பெருமான் கோவிலில் தை பூச தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
கந்த பெருமான் கோவிலில் தை பூச தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2023
04:02

அனுப்பர்பாளையம்: திருப்பூர், காலேஜ் ரோடு கொங்கணகிரியில் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த பெருமான் திருக்கோவில் உள்ளது. கோவிலில், தைப்பூச தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. விழாவையொட்டி, முன்னதாக மாலை 3:30 மணிக்கு கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம், தொடர்ந்து, 4:00 மணிக்கு தீபாராதனை, உள்ளிட்டவை நடைபெற்றது. 4:15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், நிகழ்ச்சி நடந்தது. தேரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் அபினவ், வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேர் கோவில் கிரிவல பாதையில் சுற்றி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்து சென்றனர். தேருக்கு முன் சலங்கையாட்ட குழுவினர் ஆடி சென்றனர். 5:30 மணிக்கு வான வேடிக்கையுடன் தேர் தேர் நிலையை அடைந்தது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, கோவிலில் கடந்த 2 ந் தேதி இரவு வாஸ்து சாந்தி பூஜையும், 3 ந் தேதி கோமாதா பூஜையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பவானி, தக்கார் பெரிய மருதுபாண்டியன், திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில்  108 வைணவத்தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar