பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் அருகே உள்ளது கொடும்பு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய கோவில். தைப்பூய நாளில் துவங்கும் திருத்தேர் உற்சவம் மிகவும் சிறப்பு. நடப்பாண்டு இரு தினங்களில் நடக்கும் திருத்தேரோட்ட உற்சவம் நேற்று ஆரம்பித்தது.
உற்சவத்தையொட்டி காலை கணபதி ஹோமம், வீரபாஹு, வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியன் சுவாமியின் ரதாரோகணம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து 9 மணி அளவில் திருமஞ்சனம் வரவு, 11 மணிக்கு உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு ஆகியவை நடந்தன. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் சடங்கு நடைபெற்றது. மாலை 4 மணியளவில் செண்டை மேளம் முழங்க பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா வடிவேலனுக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்ப முதல் நாள் திருத்தேரோட்டம் ஆரம்பித்து கோவிலை சுற்றி வலம் வந்தன. உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் துவங்கும்.