சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் செடல் போட்டு பக்தர்கள் நேர்தி கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2023 05:02
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.
செஞ்சி சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 43வது ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேக, ஆராதனை நடந்தது. நேற்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும். பகல் ஒரு மணிக்கு சக்தி கரகமும், தொடர்ந்து திருமுருகன் சுவாமி தலைமையில் பக்தர்கள் தீமிதித்து, அலகு குத்தி செடல் சுற்றினர். உயரமான கிரேனில் செடல் குத்திய பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். லாரி, வேன்களில் செடல் போட்டு தொங்கியும், இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். ஆகாயமார்க்கமாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு மாலை அணவித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.