தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில், அகல் விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, மூலவர் பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி, சக்தி ஸ்தோத்திரம், அர்ச்சனை நாமாவளி பஜனை, ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, மாதாந்திர வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.