பதிவு செய்த நாள்
07
பிப்
2023
05:02
மேட்டுப்பாளையம்;சிறுமுகை அருகே உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில், தைப்பூச திருவிழாவின் தொடர்ச்சியாக நேற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
சிறுமுகை பழத்தோட்டத்தில் மிகவும் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா நடைபெறும். கடந்த, ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தேர் பவணி நடந்தது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜை நடந்தது. இதில் பாலசுப்பிரமணியர் ராஜ அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் சிறுமுகை, மூலத்துறை, லிங்காபுரம், கிச்சகத்தியூர், திம்மராயம்பாளையம், இலுப்ப பாளையம், வச்சினம்பாளையம் உள்பட சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.