பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு பஞ்சமுக விநாயகர், விஷ்ணு, துர்க்கை, இடும்பன் தெய்வங்களுக்கான சன்னதிகள் உள்ளன. இங்கு தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு கல்லாங்காடு விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் அழைத்து வருதல், 9:00 மணிக்கு மேல் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா ஜமாப் நிகழ்ச்சியுடன் நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.