Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் மலையில் தமிழி ... வடபழநி ஆண்டவர் கோவில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா வடபழநி ஆண்டவர் கோவில் குடமுழுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோவிலில் 12ம் தேதி மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோவிலில் 12ம் தேதி மஹா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2023
10:02

சிருங்கேரி ஸ்ரீபவானி அம்பாள் சமேத ஸ்ரீமலஹானிகரேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும், 12ம் தேதி நடைபெற உள்ளது.கர்நாடகா மாநிலம், சிருங்கேரியில், ஸ்ரீசாரதா பரமேஸ்வரியை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து, சனாதன தர்மத்தை காக்க, 1,200 ஆண்டுகளுக்கு முன், நான்கு பீடங்களின் முதன்மையான சாரதா பீடத்தை ஸ்தாபித்தார்; முதல் பீடாதிபதியாக ஸ்ரீசுரேச்வராசார்யாரை நியமித்தார்.

இந்த மடத்தின், 35வது பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமி, உத்திராதிகாரியான ஸ்ரீபாரதீ தீர்த்த மஹா சுவாமியுடன் இணைந்து, 1985ம் ஆண்டில் மஹா கும்பாபிஷேகம் நடத்தினார்.தற்போதைய பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மஹா சன்னிதானம், ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தை நிர்மாணித்து, வரும், 12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளார். பீடாதிபதியின் உத்தராதிகாரி சீடரான ஸ்ரீவிதுசேகர பாரதி மஹா சன்னிதானம் இணைந்து, ஸ்ரீபவானி மலஹானிகரேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்த்த உள்ளார்.

விமரிசையான நிகழ்ச்சிகள்சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கவுரிசங்கர் கூறியதாவது:உலக நன்மைக்காக, லக் ஷ மோதக மஹா கணபதி ஹோமம், அதிருத்திர மஹா யாகம், சதுர்வேத பாராயணம், 18 புராணங்களின் பாராயணம், பஞ்சாக்ரீ ஸ்ரீவித்யா முதலான ஜப ஹோமங்கள் உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடக்க உள்ளன.இன்று, மஹா கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. வரும், 12ம் தேதி காலை, 7:00 மணிக்கு, மஹா சுவாமிகளால், மூலாதார மூர்த்திகள் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நிகழ
உள்ளது.அதன் பின், 15ம் தேதி மஹா உற்சவ கொடியேற்றம், 18ம் தேதி மஹா சிவராத்திரி பூஜைகள், 20ம் தேதி தேரோட்டம், 21ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும்.பஞ்சமி முதல் அமாவாசை வரை, காலை, 7:30 மணிக்கு, மஹா சந்யாச பூர்வக ருத்திர அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar