காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில், உண்டியல் எண்ணும் பணி சிவகங்கை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. வங்கி பணியாளர்கள், சேவைக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ. 17லட்சத்து 44 ஆயிரம் பணமும், 15 கிராம் தங்கமும், 668 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு நோட்டுக்களும் இருந்தன.