மிருகசீரிடம் - 3, 4: திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே! நட்சத்திரநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து பயணிக்கிறார். இந்த மாதம் வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். ஒன்பதாமிட சூரியன் சஞ்சாரத்தால் தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். வீண்கவலைகள் நீங்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதிஉதவியும் கிடைக்கலாம். பணியாளர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பம் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். பெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அரசியல்துறையினர் மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபடுவர்.
திருவாதிரை: வேகத்திலும் விவேகத்தை கடைபிடிக்கும் திருவாதிரை நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் ராகு வலுவாக சுக்கிரன் சாரம் பெற்று லாப ஸ்தானத்தில் பயணிக்கிறார். பிரயாணத்தில் தடங்கல் அகலும். திட்டமிட்டபடி காரியம் நடந்து முடியும். வீண் வாக்குவாதம் அகலும். எந்த காரியத்தையும் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர், நண்பர்களிடம் இருந்த கருத்து மோதல் மறையும். தொழில் ஸ்தானத்தில் குரு சுக்கிரன் கூட்டணி அமைந்திருக்கிறது. தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். பணியாளர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவர். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். பெண்கள் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை அகலும். கலைத்துறையினர் வாகன பயணத்தில் நிதானம் பின்பற்றவும். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரிப்பது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் தடங்கல்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற விடாமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
பரிகாரம்: நடராஜருக்கு அர்ச்சனை செய்து வணங்க பிரச்னை தீரும்.
சந்திராஷ்டமம்: பிப். 17, 18
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 10
புனர்பூசம் - 1, 2, 3: அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் புனர்பூச நட்சத்திரஅன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் ராகுவின் சாரம் பெற்று அமர்ந்திருக்கிறார். நட்சத்திரநாதன் குருவின் சஞ்சாரம் நல்ல மாற்றத்தை தரும் வகையில் அமைந்திருக்கிறது. மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். குடும்ப ஸ்தானம் மிக வலுவாக அமைந்திருக்கிறது. குடும்பத்தில் குழப்பங்கள் அகன்று நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழல் விலகும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் ஸ்தானம் மிக வலுவாக அமைந்திருப்பதால் தொழில் வியாபாரம் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் அகலும். லாபம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். பணியாளர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். கலைத்துறையினர் எதிர்பாராத செலவுக்கு ஆளாவர். அரசியல்வாதிகளுக்கு மனக்கஷ்டம் நீங்கும். மாணவர்கள் கவனத் தடுமாற்றம் இல்லாமல் படிப்பது நல்லது.
பரிகாரம்: மாரியம்மனை வணங்க பிரச்னை தீரும்.
சந்திராஷ்டமம்: பிப். 18, 19
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 11
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »