மகாசிவராத்திரி விழா: மின் விளக்கில் ஜொலிக்கும் காளஹஸ்தி சிவன் கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2023 08:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி விழவை யொட்டி கோயில் உள் பகுதியிலும் வெளிப்புறப் பகுதிகளில் வளாகம் முழுவதுமாக மின் விலகாகுகளால் கண்கள் மிளுரும் வகையில் அலங்கரிக்கப் பட்டுள்ளன. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும் சிறப்பு குளியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் வரிசைகளில் பால் மற்றும் பிஸ்கட் கொடுக்க ஏற்பாடு செய்து ள்ளதாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரிவித்தார். மேலும் கோயிலில் சிறப்பு மலர் அலங்காரம், லேசர்ஷோ மற்றும் காட்சியகங்கள் நிறுவப்பட்டுள்ளன. கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக கோயில் அருகில் தூர்ஜடி கலை அரங்கத்தை சிறப்பாக அமைத்துள்ளனர்.நகரின் அனைத்து பகுதிகளிலும் மின் விலக்குகள் அலங்காரம் விழா கோலம் பூண்டிருப்பது போல் கண்கள் கவரும் வகையில் உள்ளன. நாளை திங்கட்கிழமை 13 கண்ணப்பர் கொடியேற்றத்துடன் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க இருப்பதை யொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதோடு கோயில் சார்பில் செய்யப்பட்டுள்ளன புதிதாக மாற்றங்கள் செய்யப்பட்டு வரிசைகளில் எங்கும் ஒரு வரிசையில் இருந்து மற்றொரு வரிசைக்குள் இணைக்க இயலாத வகையில் (முக துவாரம்) நுழைவாயிலில் இருந்து தக்ஷிணாமூர்த்தி சன்னதிவரை உள்ள வரிசைகள் இணைக்காமல் திட்டமிட்டு வரிசைகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .இதே போல் குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்வதை தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடுகளும் செய்துள்ளனர். சாதாரண பக்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்வதோடு விரைவு தரிசனத்தையும் ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கோயில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை அங்கரங்க வைபவமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு.தாரக சீனிவாசுலு தெரிவித்தனர்.