பதிவு செய்த நாள்
13
பிப்
2023
08:02
நாமக்கல்: ஆஞ்சநேயர் சுவாமிக்கு இந்தாண்டில், கடைசி வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நாமக்கல் நகரில், 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவசம், வெள்ளிக்கவசம், முத்தங்கி என பல்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் மார்கழி, தை மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும், வெண்ணை காப்பு அலங்காரம் நடக்கிறது. வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படும் நாட்களில், மாலை, 4:00 மணி முதல், சுவாமி சிலை முழுவதும் தண்ணீர் ஊற்றி குளிர வைக்கப்படும். மாலை, 6:00 மணிக்கு மேல் வெண்ணை சாத்துபடி செய்யப்படும். இரவு, 9:00 மணிக்கு பிறகு அலங்காரம் களைக்கப்படும். நடப்பாண்டில் 2022, டிச.,1ல் முதல் வெண்ணை காப்பு அலங்காரம் துவங்கியது. கடைசி அலங்காரம் நேற்று நடந்தது. இதற்காக சேலம் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து, 110 கிலோ வெண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த, 2022, டிச.,1ல் தொடங்கிய வெண்ணை காப்பு அலங்காரம், நேற்று செய்யப்பட்டது. இதற்காக, 39 நாட்களும் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து மொத்தம், 4,290 கிலோ வெண்ணை கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு முறை வெண்ணை காப்பு அலங்காரம் செய்ய, ௯௦ ஆயிரத்து, ௨௦௦ ரூபாய் செலவாகிறது. இந்த செலவை கட்டளைதாரர்கள் ஏற்றுக் கொள்வதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.