பதிவு செய்த நாள்
13
பிப்
2023
08:02
தொண்டாமுத்துார் : கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரியன்று சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்படும் ருத்ராட்சத்தை, இலவசமாக பெற ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை: ருத்ராட்சை என்ற வார்த்தையின் பொருளே, சிவனின் பரவச கண்ணீர் துளி என்பதாகும். மஹா சிவராத்திரி இரவில், லட்சக்கணக்கான ருத்ராட்சங்களை சத்குரு, ஆதியோகி முன்னிலையில் பிரதிஷ்டை செய்ய உள்ளார். இந்த ருத்ராட்சத்தை இலவசமாக பெற விரும்பும் பக்தர்கள் https://isha.co/rd-ta என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்பவர் களுக்கு, ருத்ராட்சத்துடன் சேர்த்து தியா னலிங்க விபூதி, அபய சூத்ரா, ஆதியோகி புகைப்படம் ஆகியவை, அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ருத்ராட்சத்தை, குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் உட்பட, ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் அணிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.