சபரிமலை : மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார். இன்று காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.