பதிவு செய்த நாள்
14
பிப்
2023
08:02
திருச்செந்துார்: திருச்செந்துார், வெயிலுகந்த அம்மன் கோயிலில் மாசி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த உப கோயிலான, வெயிலுகந்தம்மன் கோயிலில், மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி, அதிகாலை கோயில் திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், அலங்கா ர, தீபாராதனை நடந்தது . அதனை தொடர்ந்து, அம்மன் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள கொடி மரத்தில் அதிகாலை 5:20 மணிக்கு, பாலசுப்பிரமணிய வல்லவராயர் கொடியேற்றினார். தொடர்ந்து, கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, காலை 6:10 கொடி மரத்திற்கு மகாதீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேல்ராமகிருஷ்ணன், கோயில் சூப்பரின்டென்ட் ஆனந்தராஜ். சிவன் கோயில் மணியம் நெல்லையப்பர், வேலாண்டி ஓதுவார், கரும்பன், வல்லவராயர் சமுதாய நலச்சங்கத்தினர் உட்பட பலர் கொண்டனர். திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் , இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.