400 வருட பாரம்பரிய நெற்குப்பை காவடிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2023 08:02
நத்தம், நத்தம் சமுத்திராபட்டியில் 400 வருட பாரம்பரிய வைர வேலுக்கும், நெற்குப்பை காவடி குழுவினருக்கும் சிறப்பு பூஜை நடந்தது.
நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி பகுதியில் இருந்து கடந்த 400 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் பாதயாத்திரையாக பழனிக்கு சென்று தைப்பூச தினத்தன்று முருகனை தரிசித்து காவடி செலுத்தி தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். பழனி மலைக்கோவிலில் கடந்த 7ம் தேதி காவடி செலுத்திய பின்னர் நடந்தே 103 காவடிகளுடன் பாதயாத்திரையாக மீண்டும் வீடு திரும்பினர். 9ம் தேதி பழனியில் இருந்து புறப்பட்டு ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக நத்தம் அருகே சமுத்திராப்பட்டியில் உள்ள காவடி மடத்திற்கு நேற்று மாலை வந்தடைந்தனர். அங்கு பாரம்பரிய வைர வேலுக்கும், முருகப்பெருமானுக்கும் பானக பூஜை செய்து சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. பூஜை முடிந்து மீண்டும் பாதயாத்திரை தொடங்கினர். பிப்.15 அன்று தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் இந்த காவடி குழுவினர் அங்குள்ள கோவிலில் பூஜை செய்து வீடுகளுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.