பழநி: பழநி முருகன் கோயில் உபகோவிலான மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா (பிப்.17) நாளை துவங்குகிறது.
பழநி முருகன் கோயிலில் உப கோவிலான மாரியம்மன் கோயில், மாசித் திருவிழா மூகூர்த்தகால் நடுதலுடன் நாளை (பிப்.17ல்) துவங்க உள்ளது. பிப்.,21 ல் திருக்கம்பம் தயாரிக்க, காணியாளர் அரிவாள் எடுத்து கொடுக்கும், நிகழ்ச்சி மாலை 6:30 மணிக்கு மேல் நடைபெறும். கம்பம் அலங்கரிக்கப்பட்டு மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்படும். பிப்.,28 அன்று மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெறும். தங்கமயில், புதுச்சேரி சப்பரம், சிம்ம வாகனம், வெள்ளி யானை, தங்க குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளுவார். மார்ச்.7 ல் இரவு திருக்கல்யாணமும், மார்ச்.8ம் தேதி ரதவீதியில் திருத்தேரோட்டமும் நடைபெறும். மார்ச்.9ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்ய உள்ளது.