பதிவு செய்த நாள்
20
பிப்
2023
07:02
தேவதானப்பட்டி: பெரியகுளம் பகுதிகளில் மகா சிவராத்திரி விழா நேற்று முன் தினம் இரவு துவங்கி நேற்று காலை வரை நான்கு கால பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய சிவ பூஜையில் பங்கேற்றனர். தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி யம்மன் கோயிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு கோயிலில் தங்கி நேற்று அதிகாலை வரை பூஜையில் பங்கேற்றனர். பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 7: 35 மணிக்கு துவங்கிய முதல் கால பூஜை, இரவு 10:35 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 1:35 மணிக்கு மூன்றாம் கால பூஜை, நேற்று காலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆன்மீக பாடல்களுக்கு சிறுவர்கள், சிறுமிகள் நடனம் ஆடினார். இதே போல் கைலாச பட்டி கைலாசநாதர் கோயில், பாலசுப்பிரமணியர் கோயில், சுதந்திர வீதி மீனாட்சி அம்மன் படித்துறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தேவதானப்பட்டி மலைமேல் பரமேஸ்வரர் கோயில், ஆதி காசி லிங்கேஸ்வரர் கோயில், கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவு அருகே காளஹஸ்தீஸ்வரர் கோயில், எருமலைநாயக்கன்பட்டி சுயம்புலிங்கேஸ்வரர் கோயில், சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோயில், மேல்மங்கலம் ப்ருகன் நாயகி அம்பிகா சமேத மாயா பாண்டீஸ்வரர் கோயில், குள்ளப்புரம் திருநீலகண்டேஸ்வரர் கோயில், ஜெயமங்கலம் சொக்கநாதர் கோயிலில் மகா சிவராத்திரி பூஜை நடந்தது. பெரியகுளம் தாலுகா பகுதிகளில் ஏராளமான கோயில்களில் குலதெய்வம் பூஜை நடந்தது.