பதிவு செய்த நாள்
10
செப்
2012
10:09
தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் நடந்த 108 கோமாத பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்த ஆசிரமத்தின் வெள்ளி விழா, சாரதா ஆசிரமத்தின் 15வது ஆண்டு நிறைவு விழா, சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் 108 கோமாதா பூஜை வழிபாடு நடந்தது. அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பசுக்கள் வேன்களில் கொண்டு வரப்பட்டன.
பசு கன்றுகள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. "ஓம் சக்தி கோமாதா போற்றி போற்றி...என்று துவங்கி கோமாதா வடிவான நாராயணியே போற்றி போற்றி போற்றி ஓம்! என 108 போற்றிகள் கூறப்பட்டு வழிபாடு நடந்தது. டாக்டர் செண்பகராமன், தொழிலதிபர்கள் அழகராஜா, ராஜகோபால் கோமாத பூஜையை துவக்கி வைத்தனர்.
பெருங்குளம் செங்கோல் ஆதினம் ஆதின கர்த்தர் கல்யாணசுந்தர சத்ய ஞானசுவாமிகள் தலைமை வகித்தார். காசிவிசுவநாதர் கோயில் நிர்வாக அதிகாரி கணபதி முருகன், மூத்த குடிமக்கள் மன்ற தலைவர் துரை தம்புராஜ், பாம்பே ஸ்டோர்ஸ் உரிமையாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். விவேகானந்த ஆசிரம நிர்வாகி சுவாமி அகிலானந்தா, மேற்கு வங்காளம் சுவாமி ஸ்மரணாநந்த மகராஜ், சென்னை ராமகிருஷ்ண ஆசிரம தலைவர் சுவாமி கவுதமானந்த மகாராஜ், கோயம்புத்தூர் தயானந்த சரஸ்வதி, ஹரித்துவார் சுவாமி கியான் தேவ்ஜி, ரவிநாதனந்தாபுரிஜி ஆசியுரை வழங்கினர்.
முப்பெரும் விழா கமிட்டி துணைத் தலைவர்கள் விவேகானந்தன், லிங்கராஜ், செயலாளர் தீனதயாளன், பொருளாளர் சங்கரன், சுவாமி குருபரானந்தா, சுவாமி ராகவானந்தா, பா.ஜ.,குமரேச சீனிவாசன், திருநாவுக்கரசு, கணேசன், தொழிலதிபர்கள் பிரதாப் ராஜா, ராமசுப்பையா, மோகன் படேல், சிவ்கன் படேல், துரைச்சாமி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், சுந்தரம், சாந்தி, வக்கீல் திருமலைவடிவு, பேராசிரியை பார்வதி, ரத்ததான கழகம் குமார், மாடசாமி ஜோதிடர், கவுரி ஜூவல்லர்ஸ் முருகன்ராஜ், ராஜாமணி டெக்ஸ்டைல்ஸ் ராஜாமணி, சண்முகசுந்தரம், பரமகல்யாணி ஜூவல்லர்ஸ் பெருமாள் நாயுடு, பிச்சாண்டி செட்டியார் சைக்கிள் டீலர் பழனி, சதீஷ், கவுன்சிலர்கள் சங்கரசுப்பிரமணியன், கருப்பசாமி, சாமி உட்பட திரளான பக்தர்கள் தரினம் செய்தனர்.