பதிவு செய்த நாள்
20
பிப்
2023
07:02
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணி, இரவு 10 மணி, அதிகாலை 1 மணி, அதிகாலை 4 மணிக்கும் விசேஷ பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பீரங்கிமேடு அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாலை 6 மணிக்கும், இரவு 9 மணி, 12 மணி, அதிகாலை 3 மணிக்கும் சிறப்ப அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. இரவு 12 மணிக்கு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். சிறுகடம்பூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் 19 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது. இதை முன்னிட்டு மாலை 6 மணி, இரவு 10 மணி, 12 மணி, அதிகாலை 2 மணி, அதிகாலை 4 மணிக்கும் விசேஷ அபிஷகமும். சிறப்பு பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெகனுார் விசாலாட்சி உடனுரை பீமநாதீஸ்வரர் கோவிலில் மாலை 6 மணிக்கும், இரவு 10 மணிக்கும், இரவு 12 மணிக்கும், அதிகாலை 2 மணிக்கும், காலை 4 மணிக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.