பழநி: பழநி மலைக்கோயில் சென்றுவர பயன்படும் ரோப் கார் சேவை, நாளை (பிப்.24) பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது. பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்லாம். மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (பிப்.,24.) ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வின்ச், படி பாதை, யானைப்பாதை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.