பதிவு செய்த நாள்
11
செப்
2012
11:09
கொடைக்கானல்: கொடைக்கானலில் மழை வேண்டி, பிரியாணி படையல் நடந்தது. கொடைக்கானலில் ஆண்டு தோறும் சராசரியாக 1500 மி.மீ., மழைபெய்யும். இந்தாண்டு தென்பருவமழைபொய்த்தது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. மழை பெய்ய வேண்டி நகராட்சி சார்பில், மும்மத பிராத்தனையும், பிரியாணி விருந்தும் நடந்தது. குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரிசர்வாயரில், நகராட்சி தலைவர் கோவிந்தன், கமிஷனர் பூங்கொடி, முன்னாள் நகராட்சித்தலைவர் குரியன் ஆபிரகாம் தலைமையில் பிரார்த்தனை வழிபாடு நடந்தது. மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, கேசரியும் ஏரிக்கரையோரத்தில் வனதேவதைக்கு படையல் வைக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்களுக்கு கொண்ட உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், நகராட்சி ஒப்பந்தகாரர்கள், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கும் தடபுடல் விருந்து பரிமாறப்பட்டது. நகராட்சித்தலைவர் கூறுகையில்; "ஒவ்வொரு ஆண்டும், மழைவேண்டி வன தேவதைக்கு வழிபடுவது நடத்துவது வழக்கம். இந்தாண்டும் சிறப்பு பிரார்த்தனை, பிரியாணி விருந்து படையல் செய்யப்பட்டது, என்றார்.