பூமாயி அம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் : பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2023 04:02
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்தூரின் தென் எல்லை தெய்வமாக பூமாயி அம்மன் உள்ளார். இக்கோயிலில் மூலவராக எழுந்தருளியுள்ள சப்தமாதாக்களில் வைஷ்ணவியே பூமாயி அம்மனாக அருள்பாலிக்கிறார். இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலுக்கு கடந்த 1981, 1994, 2008 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடந்து 18 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது ஐதீகம் ஆகும். இதன் மூலம் கோயிலில் பராமரிப்பு பணிகள், வர்ணம் பூசுதல், கூடுதலாக தேவைப்படும் திருப்பணியும் நடைபெறும். கோயில் கட்டுமானங்கள் வலுப்பெறும். இதனால் இக்கோயிலுக்கு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரியுள்ளனர்.