பதிவு செய்த நாள்
25
பிப்
2023
03:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் தேர்த்திருவிழா குறித்து, இன்று (25.02.2023) மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவில் தேர்த்திருவிழா இம்மாதம், 27ம் தேதி துவங்குகிறது. அடுத்த மாதம்,6ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. தேர் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம், இன்று (25.02.2023) மாலை, 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே, இந்த ஆலோசனை கூட்டத்தில், கோவில் ஸ்தலத்தார், பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.