ஊட்டி: பொக்காபுரம் மாரியம்மன் தேர் திருவிழா, 27ம் தேதி நடக்கிறது. ஊட்டி சோலூர் அருகே பொக்காபுரம் மாரியம்மன் விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா நேற்று துவங்கி நடை திறக்கப்பட்டது. இன்று, 25ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றல் அம்மனுக்கு அபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. 26ம் தேதி மாலை, 8:00 மணிக்கு கங்கை பூஜை நடக்கிறது. 27ம் தேதி இரவு, 10:00 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் திருத்தேர் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கிறது. கலெக்டர் அம்ரித், எஸ்.பி., பிரபாகர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். 28ம் தேதி காலை, 8:00 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.