பதிவு செய்த நாள்
25
பிப்
2023
06:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மாசிமக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. காலை 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் , 7:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், துஜபடம், ரிஷபக் கொடி பூஜை, பிரம்மாதி தேவர்கள் ஆவாகனம், அஸ்திரதேவர் நந்திகேஸ்வரர் பூஜை நடந்தது. பகல் 11:00 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. சோமஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தை வலம் வந்து பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள் ஆவாகனம், ரக்ஷாபந்தனம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் திருப்பணி நடைபெற்று வருவதால், சுவாமி புறப்பாடு தினசரி கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவாச்சாரியர்கள் விழாவை முன்னின்று நடத்த, பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.