பதிவு செய்த நாள்
27
பிப்
2023
09:02
பொள்ளாச்சி: நெகமம் அருகே, பழமையானஅமணீஸ்வரர் கோவிலில் சிவன் சன்னதிக்குள் சூரிய ஒளி விழுந்ததை கண்டு பக்தர்கள்பரவசமடைந்தனர்.
நெகமம் அருகே, தேவாணம்பாளையம் ஆற்றங்கரையில் பழமையான அமணீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி ஆகிய நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சூரியன் மறையும் நேரத்தில், சிவன் சன்னதிக்குள் கருவறையில் உள்ள சிவபெருமான் மீது சூரிய ஒளி விழுந்தது. இதை கண்டு பக்தர்கள் பரவசமடைந்து, சிவசிவ என, கோஷமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.