பதிவு செய்த நாள்
28
பிப்
2023
01:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா, இன்று (28 ம்தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருகிற, 5ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 6ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அரங்கநாதருக்கு தங்க கவசம்: காரமடை அரங்கன் வழிபாட்டு குழுவினர், 34.51சவரனில், அரங்கநாத சுவாமிக்கு, தங்கத்தினால் ஆன, சங்கு, சக்கரம் அபயஸ்த்தம் மற்றும் வெள்ளியினால் ஆன, ரத்தின அங்கி செய்தனர். இதை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, தாச பளஞ்சிக திருமண மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை சக்கரவர்த்தி பாலாஜி ரங்காச்சாரி ஆகியோர் தலைமை வகித்தனர். பி.எம்.என். லோகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், சங்கத் தலைவர் கோவிந்தன், கோவில் செயல் அலுவலர் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். தங்கத்தினால் செய்த சங்கு, சக்கர அபயஸ்த்தம், வெள்ளியிலான ரத்தின அங்கி ஆகியவற்றை, ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்று நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.