பதிவு செய்த நாள்
28
பிப்
2023
02:02
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தலில், சோழர் குல சக்கரவர்த்தி ராஜராஜ சோழருக்கும், ராஜேந்திர சோழருக்கும் குலகுருவாக இருந்த ஈசான சிவ பண்டிதரால், முதலாம் ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்ட விசாலாட்சி உடனுறை உத்திர கங்கைகொண்டசோழீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்குள்ள இறைவன் மகாதேவர் என்றும் கங்கை கொண்ட சோழீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா, பல நுாறு ஆண்டுகளுக்குப் பின், மார்ச் 5ல் நடக்கிறது. விழாவையொட்டி மார்ச் 3ல், மாலை 4:00 மணிக்கு மூத்த பிள்ளையார் வழிபாடு நடக்கிறது. மார்ச் 4ல், காலை 10:40 மணிக்கு திருவிளக்கு, புனித நீர், திருமகள், மலைமகள் வழிபாடு, நிலதேவர் வாஸ்து வழிபாடு உள்ளிட்டவை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை எனப்படும் முதலாம் கால வேள்வி நடக்கிறது. கும்பாபிேஷக தினமான மார்ச் 5ல் காலை 10:45 மணிக்கு விமான திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு திருமஞ்சனம், ராஜ அலங்காரம், திருமுறை விண்ணப்பம் உள்ளிட்டவை நடக்கிறது.