பதிவு செய்த நாள்
28
பிப்
2023
04:02
அனுப்பர்பாளையம்: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பூர், அடுத்த திருமுருகன் பூண்டியில் புகழ்பெட்ட அருள்மிகு திருமுருகநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவில் தேர் திருவிழா கடந்த 27 ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி, இன்று 28 ம் தேதி காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத திருமுருக நாதருக்கு சிறப்பு பூஜை ஒநடைபெற்றது. தொடர்ந்து, கொடியேற்றப்பட்டது. இதில் நூற்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 1ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 2 ம் தேதி பூத வாகனம் சிம்ம வாகன காட்சிகள், 3 ம் தேதி புஷ்ப வாகன காட்சி, 4 ம் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சி, 5 ம் தேதி திருக்கல்யாணம் யானை வாகன அன்ன வாகன காட்சிகள் உள்ளிட்டவை நடைப்பெறுகிறது. 6 மற்றும் 7 ந் தேதி மாலை 3 : 00 மணிக்கு, திருமுருகநாதர் தேர் வடம் பிடித்தல், 8 ந் தேதி பரிவேட்டை குதிரை, சிம்ம வாகன காட்சிகள், தெப்பத்திருவிழா, 9 ந் தேதி ஸ்ரீ சுந்தரர் வேடுபறி திருவிழா, 10 ம் தேதி பிரம்ம தாண்ட தரிசன காட்சி, 11ம் தேதி மஞ்சள் நீர் விழா, உள்ளிட்டவை நடைப்பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா, தக்கார் பெரிய மருதுபாண்டியன், ஆகியோர் செய்து வருகின்றனர்.