பதிவு செய்த நாள்
01
மார்
2023
06:03
சூலூர்: ஊத்துப்பாளையம் கரிய காளியம்மன் கோவில் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பாளையத்தில், உள்ள கரிய காளியம்மன் கோவில் பழமையானது. கடந்த, 22 ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் பொங்கல் விழா துவங்கியது. 27 ம்தேதி மாகாளியம்மனுக்கு காப்பு கட்டுதலும், விநாயகர் பொங்கல் வைத்தல், சக்தி கரகம் அழைத்தல், உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று காலை, ஆதி விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, மாகாளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலை கரிய காளியம்மனுக்கு ஆபரணங்கள் கொண்டுவரப்பட்டு, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று காலை, 7:00 மணிக்கு, ஆதி விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். 9:30 மணிக்கு, பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நாளை காலை, 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டும், 10:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலாவும், 3:00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.