பாலக்காடு: கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு எல்லா ஆண்டும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் கடந்த பிப்., 27ம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்தன. உற்சவத்தையொட்டி செம்பை குடும்பத்தினரால் நடத்தும் பிரசித்தி பெற்ற செம்பை சங்கீத உற்சவம் நேற்று ஆரம்பித்தன. பிரபல இசை கலைஞர் டி.வி., கோபாலகிருஷ்ணனின் ஆரம்ப கச்சேரி இசை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தனர். இவரக்கு சுப்புராமன் வயலினிலும் ஆம்பூர் பத்மநாபன் மிருதங்கத்திலும் தீபு ஏலம்குளம் கடத்திலும் ரமேஷ் வெள்ளி நேழி முகர்சங்கிலும் பக்கவாத்தியம் வாசித்தனர். தொடர்ந்து சுகுமாரி நரேந்திர மேனோனின் இசை கச்சேரி நடந்தது. முன்னதாக செம்பை வைத்தியநாத பாகவதரின் உருவ சிலைக்கு முன் குத்து விளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து செம்பை வித்யா பீடம் சார்பில் செம்பை சுரேஷ் கீழத்தூர் முருகன் ஆகியோர் சேர்ந்து டி.வி. கோபாலகிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
இன்று (2ம் தேதி) மாலை 6.30 மணிக்கு பெங்களூரு ஹெராம்ப், ஹேமந்த் ஆகியோரின் புல்லாங்குழல் கச்சேரி நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு இசைக்கலைஞர் விஜய் யேசுதாஸின் கச்சேரி நடக்கிறது. மூன்று நாள் கொண்ட சங்கீத உற்சவத்தின் சிறப்பு நாளான நாளை (3ம் தேதி) காலை 8.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. மாலை 6 க்கு சென்னை ராமநாதனின் சாக்ஸபோன் கச்சேரி நடக்கிறது. 7.00 மணிக்கு பிரகாஷ் உள்ளியேரியின் ஹார்மோனியம் நடக்கும். இரவு 9.00 மணிக்கு கர்நாடக இசைக் கலைஞர் ஜேசுதாஸ் அமேரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக சங்கீதா ஆராதனை நடத்துகிறார். தொடர்ந்து 11.00 மணிக்கு ஜயனின் சங்கீத கச்சேரி நடக்கின்றன. மார்ச் 4ம் தேதி ஏகாதசி உற்சவம் மூலவரின் ஆறாட்டு நிகழ்ச்சிகளுடன் நிறைவடைகிறது.