திருச்செந்துாரில் மாசித் திருவிழா சண்முகர் சிவப்பு சாத்தி வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2023 08:03
திருச்செந்துார்: திருச்செந்துார் கோயில் மாசித்திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர்சிவப்பு சாத்தி கோலத்தில் அருள்பாலித்தார்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா கடந்த பிப்., 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் ஏழாம் திருநாளான நேற்று, அதிகாலை1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலைசுவாமி தங்கசப்பரத்தில் சிவப்பு பட்டு, சிவப்பு மாலை அணிந்து சிவப்பு சாத்தி கோலத்தில், சிவன் அம்சத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (4ம்தேதி) எட்டாம் திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி வீதியுலா, 11.30 மணிக்கு பச்சை சாத்தி வீதியுலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (6ம்தேதி) நடக்கிறது