குருவாயூர் கோவில் யானையோட்டத்தில் கோகுலுக்கு வெற்றி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2023 08:03
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு எல்லா ஆண்டு மாசி மாதம் உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு 10 நாள் கொண்ட உற்சவத்திற்கு நேற்று "யானையோட்டத்துடன்" ஆரம்பமாயின.
நேத்து பிற்பகல் 3 மணியவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட 19 யானைகள் கலந்து கொள்ளும் "யானையோட்டம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் யானைகளில் 10 யானைகளில் இருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த செந்தாமராக்ஷன், தேவி, கோகுல், கண்ணன், விஷ்ணு ஆகிய ஐந்து யானைகளை முன்னுரிமை அளித்து நடந்த "யானையோட்டத்தில் " கோகுல் என்ற யானை வெற்றிபெற்றனர்.
மஞ்சுளால் சந்திப்பின் அருகில் நின்று ஆரம்பித்த இந்த யானையோட்டத்தில் கோகுல் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். ஆரம்பத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த செந்தாமராக்ஷன் என்ற யானையை மறிகடந்து வெற்றி இலக்கை தாண்டி கிழக்கு கோபுரம் நடை வாயியாக கோவிலுக்குள் நுழைந்த 33 வயதுடைய ஒற்றைக் கொம்பன் கோகுல் சுற்றம்பலத்தில் ஏழு முறை முறை வலம் வந்து கொடி மரத்தின் அருகே நின்று துதிக்கை உயர்த்தி மூலவரை வணங்கினர். கோவில் திருவிழாக்களில் தென்னோலை விழுந்து ஒரு தந்தம் இழக்கப்பட்டு பைபர் தந்தம் பொருத்தி அணிவகுப்புகளின் கலந்து கொள்ளும் கோகுல் என்னை யானைக்கு ரசிகர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டத்தில் கண்ணன் என்ற யானை மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு பிறது யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியான "யானையூட்டும்" கோவிலின் வடக்கு கோபுர நடை அருகே நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தன. மாலை 6.30 கோவில் தந்திரி பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடின் தலைமையில் உற்சவத்திற்கு கொடியேறின. உற்சவ நாட்களில் கோவிலில் எட்டும் அனைத்து பக்தர்களுக்கும் காலையில் மூலவரின் பிரசாதமாக கஞ்சியும் கூட்டும் வழங்கப்படும். உற்சவ நாட்களில் யானைகள் அணிவதுக்கும் "காழ்ச்ச சீவேலி"யில் பிரபல வாத்திய கலைஞர்களின் செண்டை மேளம் நடக்கும். இரவில் ஸ்ரீபூதபலிக்கு உற்சவமூர்த்தி வடக்கு கோபுர நடையில் எழுந்தருளும் வைபவம் நடக்கும். உற்சவத்தையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள மேல்பத்தூர் கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறும். 12ம் தேதி உற்சவமூர்த்திக்கு நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவடைகின்றன.