சின்னாளபட்டி: சின்னாளபட்டி கீழக்கோட்டை லிங்குசாமி சித்தர் கோயிலில் குருபூஜை விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், சிவ பஞ்ச வாத்தியங்களுடன் 18 சித்தர்களுக்கான ஹோமம் நடந்தது. ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருவாசக முற்றோதலுடன் மூலவருக்கு 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷமான அலங்காரம் செய்யப்பட்டு, தேவார பாராயணம், மகா தீபாராதனை நடந்தது. மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, அன்னதான வினியோகம் நடந்தது.