நாகை மூகாம்பிகை கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பெண்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2023 04:03
நாகப்பட்டினம்: நாகையில், பிரசித்திப் பெற்ற தாய் மூகாம்பிகை கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகை, ஆரிய நாட்டுத் தெரு மீனவ கிராமத்தில் பிரசித்திப் பெற்ற தாய் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் மாசி திருவிழா கடந்த 2 ம் தேதி, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோறும் அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் பல்லக்கில் எருந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். முக்கிய நிகழ்வாக இன்று திருத்தேரோட்டம் நடந்தது. தேரை ஆயிரக்கணக்கான பெண்கள் வடம் பிடித்து வீதியுலா வந்தனர்.பின் கோவில் வந்தடைந்த தேரில் இருந்து அம்பாள் கோவிலில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.