Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோயிலில் மாசி மக ... மாசி பவுர்ணமி : திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மாசி பவுர்ணமி : திருவண்ணாமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் தேரோட்டம் : கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் தேரோட்டம் : கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

06 மார்
2023
05:03

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் தேர்த்திருவிழா  விமரிசையாக நடைபெற்றது. கோவிந்தா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திருக்கோவிலில்  மாமன்னர் திருமலை நாயக்கர் திருப்பணிகள் செய்து தேரோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததாக புராண கால சான்றுகள் கூறுகிறது. இத்தகைய சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இத்திருக்கோவிலில் மாசி மகத் திருத்தேர்ப் பெருந்திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூலவர் அரங்கநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை தீபாராதனை, ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத சுவாமி  அன்ன வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு. சிகரம் வைத்தாற் போல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று(6ம் தேதி) நடைபெற்றது. நிகழ்ச்சியை யொட்டி அதிகாலை 5.30 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அரங்கநாத ஸ்வாமி நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க திருத்தேருக்கு எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீ அரங்கநாதசுவாமியை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு பூஜைக்கு பின்னர் தாசர்கள் சங்கு ஊதிட தாரை தப்பட்டை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோசத்துடன்  திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்... திருத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாத ஸ்வாமி 4 மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு  காட்சியளித்தார். அதன்பின்னர் இரவு திருத்தேர் தேர்நிலையை அடைந்தது.திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar