காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உத்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2026 10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று தீர்த்தவாரி உத்சவம் விமரிசையாக நடந்தது.
பெருமாளின், மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 52வது திவ்யதேசமான, சொன்னவண்ணம் செய்த பெருமாள் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 11 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உத்சவமான கடந்த 14ம் தேதி காலை கருடசேவை உத்சவம் நடந்தது. பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் ஒன்பதாம் நாள் உத்சவமான நேற்று ஆள்மேல் பல்லக்கு உத்சவம் நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் யதோக்தகாரி பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள குளக்கரையில் எழுந்தருளினார்.