சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே நாகமலை அடிவாரத்தில் உள்ள வீமலிங்கேஸ்வரர் கோயிலில் வள்ளலாரின் 59 ம் ஆண்டு பூசவிழாவும், 152வது வடலூர் பூச ஜோதியும் நடந்தது. இவ்விழாவில் அகவல் பாராயணம் பாடி, சன்மார்க்க கொடியேற்றினர். இதையடுத்து குத்துவிளக்கு பூஜை நடந்தது. மதுரை நேதாஜி சுவாமிநாதன் ’நேதாஜியின் சமத்துவமும் வள்ளலாரின் சன்மார்க்கமும்’ எனும் தலைப்பிலும், அனுப்பானடி பெருமாள் ’சன்மார்க்க நெறி’ எனும் தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அருட்பா பாடல் பாடினர். இதையடுத்து அன்னதானம் வழங்கினர். வீமய்யா குடும்பத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இவ்விழாக் கூட்டத்தில் எதிர்வரும் 60ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், கிராம மக்களிடமும் உயிர் கொல்லாமை, பசியாற உணவு, அடுத்தவருக்கு உதவியான வாழ்க்கை உள்ளிட்ட சன்மார்க்க நெறி குறித்து பரப்புரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானித்தனர்.