பதிவு செய்த நாள்
08
மார்
2023
11:03
பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நேற்று (மார்ச்.7)ல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
பழநி, கோயில் நிர்வாகத்தின் உபகோயிலான மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்,.17ல் மூகூர்த்தகால் நடப்பட்டு துவங்கியது. பிப்.,22,ல் கோயில் முன் கம்பம் நட்டனர். பிப்., 28 கொடியேற்றம் நடைபெற்று, கோயில் முன் வைக்கப்பட்ட கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. பக்தர்கள், கம்பத்திற்கு பால், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மார்ச்.1ல் அடிவாரம், குமாரசத்திரம் அழகு நாச்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தங்க குதிரை, புதுச்சேரி சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி ரிஷபம், வெள்ளி யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பட்டு நடைபெற்று வருகிறது. (மார்ச்.,7) நேற்று மாலையில் பொட்டும், காரையும் கொண்டு வருதல் நடந்தது. இரவு 7:13 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. (மார்ச்.,8 ல்) இன்று அம்மன் மாதிரி பிள்ளையார் கோயிலில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும். மதியம் 3:00 மணிக்கு மேல் திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இரவு வண்டி கால் பார்த்தல், சக்தி கரகம், திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. நாளை (மார்ச்.,9 ) கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது.