சின்னாளபட்டி: சின்னாளபட்டி ஜீவா நகரில், பாரம்பரிய சந்து மாரியம்மன் கோவில் விழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், நேற்று அம்மன் அழைப்பு நடந்தது. பிருந்தாவனத் தோப்பில், கரகம் பாலித்தல் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கரகம், மேளதாளத்துடன் முக்கிய தெருக்களில் ஊர்வலம் நடந்தது. பந்தலை கரகம் வந்தடைந்த பின், பலர் முளைப்பாரி அழைப்பு, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சிறப்பு பூஜைகள், அன்னதான வினியோகம் நடந்தது. பொது அபிஷேக, ஆராதனையை தொடர்ந்து, முளைப்பாரியுடன் கரகம் ஆற்றில் இறங்குதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.