பரமக்குடி கோயில்களில் கஜேந்திர மோட்சலீலை: கருட வாகனத்தில் பெருமாள் காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2023 11:03
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று மாசி மக விழாவையொட்டி, கஜேந்திர மோட்ச லீலை நடந்தது.
இக்கோயிலில் நேற்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் அருள் பாலித்தார். பின்னர் கோயில் முன்பு வைகை ஆற்றில் மண்டகப்படிக்கு எழுந்தருளி, அங்கு தீர்த்த வாரி உற்சவம் நடந்தது. அப்போது முதலையின் பிடியில் சிக்கிய கஜேந்திரனுக்கு (யானை) பெருமாள் சாப விமோசனம் அளிக்கும் லீலை நடந்தது. தொடர்ந்து 6:30 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து பெருமாள் இரவு 8:00 மணிக்கு கோயிலை அடைந்தார்.
*பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு ராமர் கருட வாகனத்தில் புறப்பாடாகினார். தொடர்ந்து நாயுடு மகாஜன சபையில் எழுந்தருளி 108 சங்காபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை 6:00 மணிக்கு கஜேந்திர மோட்ச லீலை நிறைவடைந்து, ராமர் இரவு 8:00 மணிக்கு கோயிலை அடைந்தார்.