சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மலைநாச்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா நடந்தது. எஸ்.புதூர் ஒன்றியம் பிரான்பட்டியில் ஆண்டுதோறும் மாசி வழிபாடு நடத்தப்படும். இந்தாண்டு திருவிழா கடந்த பிப். 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மந்தை முன்பாக பெண்கள் கும்மியடித்து வழிபாடு செய்தனர். மார்ச் 7 ம் தேதி இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். நேற்று காலை முதல் ஏராளமானோர் நேர்த்திக்கடன் கிடா பலியிட்டு வழிபாடு செய்தனர்.