பதிவு செய்த நாள்
09
மார்
2023
11:03
பரமக்குடி: பரமக்குடி பகுதிகளில் நடந்த காமன் பண்டிகை விழாவில், ரதி, மன்மதன் வேடமிட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். பழங்கால தமிழர்களின் பண்டிகையான காமன் பண்டிகை விழா, பரமக்குடி, எமனேஸ்வரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் கொண்டாடப்பட்டது. இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து 3 வது நாள் தொடங்கி 15 நாட்கள் நடக்கிறது. அப்போது தெருக்களின் சந்திப்புகளில் மரத்தை நட்டு பூஜித்தனர். தொடர்ந்து ரதி, மன்மதன் திருக்கல்யாணம் உட்பட நிகழ்வுகள் நடத்தப்பட்டது. சிவனின் தவத்தை கலைக்க சென்ற மன்மதனை எரிக்கும் நாள் காமதகனம் ஆகும். இதன்படி மார்ச் 6 அன்று காம தகனமும், மறுநாள் ரதியின் வேண்டுகோளுக்கு ஏற்ப மன்மதனை எழுப்பும் நிகழ்வு நடந்தது. அப்போது ஆண் குழந்தைகள் பலரும் ரதி, மன்மதன், முருகன், விநாயகர், சிவன், பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து உற்சாகமாக கொண்டாடினர்.