பதிவு செய்த நாள்
11
மார்
2023
03:03
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, ராஜகணபதிக்கு, 16 வகையான சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வெள்ளைஅரளி அலங்காரத்தில் விநாயகர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காட்டம்பட்டிபுதுார் பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* உடுமலை அமராவதிநகரில் சித்தி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், அமராவதிநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். சின்னபொம்மன்சாளை விநாயகர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடுமலை குட்டைத்திடலில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோவிலிலும், சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.