உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் புதிய தங்க கவசம் அணிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2023 03:03
உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் கடந்த இரு நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தது.
சுயம்புவாக அவதரித்த வராகி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் அரு.சுப்பிரமணியன், கோயம்புத்தூர் துரை ஆகிய இரு உபயோதாரர்கள் மூலவர் வராகிஅம்மனுக்கு புதியதாக தங்க கவசம் வழங்கினர். தங்க கவசம் அணிவிப்பதை முன்னிட்டு 51 வேத விற்பன்னர்கள் பங்கேற்று மகா யாக வேள்வி நடந்தது. 1008 சங்காபிஷேக பூஜைகள் சன்னதி முன்பு நிறைவேற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து ஏராளமான பெண்கள் நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.