பங்குனி பூஜைகளுக்காக சபரிமலை 14ம் தேதி நடை திறப்பு : ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2023 05:03
சபரிமலை, பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 14–ம் தேதி மாலையில் திறக்கிறது. தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. 14–ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்க்கப்படும். பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 15–ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும், தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்தி , நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதிேஹாமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். 19–ம் தேதி வரை எல்லா நாட்களிலும் காலையில் கணபதிேஹாமம், உஷபூஜை, மதியம் களபாபிேஷகம், கலசாபிேஷகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிேஷகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை, அத்தாழபூஜை போன்றவை நடைபெறும். 19–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக 26–ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். இந்த நாட்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.