பதிவு செய்த நாள்
11
மார்
2023
06:03
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த் திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது.
காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 6ம் தேதி தேரோட்டம் நடந்தது. 7ம் தேதி முக்கிய விழாவான தீ பந்த சேவையும், குதிரை வாகனத்தில் சுவாமி பரிவேட்டை உற்சவம் நடந்தது. 8ம் தேதி இரவு, 10:30 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார். பின்னர் தெப்போற்சவம் நடந்தது. 9ம் தேதி சந்தான சேவை, சாற்றுமுறை உற்சவம் நடந்தது. நேற்று விடியற்காலை, காரமடை நகரில் தேர் செல்வம் 4 வீதிகளில் எட்டுத்திக்கும் வைத்திருந்த, பலி பீடங்களுக்கு, சிறப்பு பூஜை செய்து கட்டியிருந்த காப்பை அவிழ்த்தனர். பின்னர் காலை, 6:00 மணிக்கு விழா நிறைவாக கொடி இறக்கப்பட்டது. இவ்விழாவில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், நிர்வாகத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.