சின்னாளபட்டி, முன்னிலைக்கோட்டையில் விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், மந்தையம்மன், நவகிரக கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. காப்பு கட்டுகளுடன் துவங்கிய விழாவில் கணபதி ஹோமம், புனித மண் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், ஸ்ரீ ருத்ர ஜெபம், மூலிகை வேம்பியுடன் இருகால யாகசாலை பூஜைகள் நடந்தது. கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, திருமுறை விண்ணப்பத்துடன் கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம், வாணவேடிக்கை நடந்தது.