பழமையான காரைக்கால் சௌந்தரேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2023 07:03
காரைக்கால்: காரைக்காலில் சோழமகராஜர் காலத்தில் 500ஆண்டு பழமையான சௌந்தரேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட தென்னங்குடி கிராமத்தில் மிகபழமையான பிரசித்திப்பெற்ற ஸ்ரீசௌந்தரநாயகி சமேத சௌந்தரேஸ்வரர் கோவில் 500ஆண்டு பழமையாக் கோவில் பழடைந்த நிலையில் வெப்பமரம் அடியில் சௌந்தரேச்வர் இருந்துள்ளது. இக்கோவிலில் மேற்கு திசையில் உள்ளதால் சோழமகராஜா காலத்தில் வெள்ளை கழுகு சௌந்தரேச்வரருக்கு சிறப்பு பூஜை செய்துள்ளது.என்று ஐதிகம் மேலும் சிவராத்திரி அன்று நல்லபாப்பு சிவனுக்கு பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது.பக்தர்கள் நினைத்த அனைத்து நிறைவேறும் இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியிலிருந்து பக்தர்கள் தினம் வருகின்றனர்.இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி செந்தரேச்வரரை வழிப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு நினைத்த காரியம் நிறைவுபெற்றுள்ளது.இதனால் பழடைந்த இக்கோவிலை சத்தியமூர்த்தி பெரும் முயற்சியால் கடந்த (12.6.2011)அன்று மகா கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
தற்போது இக்கோவிலில் ஸ்ரீஸௌந்தர நாயகி அம்பாள்.ஸ்ரீவலம்புரி விநாயகர்,ஸ்ரீசெந்தூர் முருகன்,துர்கை, பைரவர். சூரியன், தெட்சிணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் உள்ளது.இக்கோவில் பிரதோஷம்.அமாவாசை, பெளர்னமி, கிருத்திகை, ஷஸ்டி.சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் விசோஷ பூஜைகள் நடைபெறும்.கோவில் காலை 6மணி முதல் 7.30மணி வரை மாலை 5.30மணி முதல் 8.30வரை திறந்திருக்கும்.தினம் காலை வேலையில் முதல்காலபூஜை நடைபெறும்.இக்கோவில் 12 ஆண்டு கும்பாபி பேஷகம் நிறைவை முன்னிட்டு வரும் (10.4.2023)அன்று பாலாலய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் கோவில் சூற்றி வண்ண மலர்கள், மூலிகை செடிகள் கொண்டு ஒருசிவன் நந்தவனம் போல் உள்ளது.மேலும் குழந்தை இல்லாதவர்கள். திருமணதோஷம்.உடல் பாதிப்பு. குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைக்கு தீர்வுக்காணும் வகையில் தினம் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சௌந்தரேச்வரரை வழிப்பட்டு செல்கின்றனர்.